Categories
உலக செய்திகள்

ஐயான் சூறாவளியின் போது… வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட சுறா…!!!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து ஒன்றாம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது. அயர்லாந்து மற்றும் கேப் கேனவெரல் பகுதிக்கு இடையே சூறாவளி மையம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை மத்திய ஃப்ளோரிடாவையும் பின்னர் மேற்கு அட்லாண்டிக் பகுதியில் புயல் கடந்து செல்லும் என தேசிய சூறாவளி மையம் கூறியுள்ளது.

இதனால் பிரஞ்சு, பிரேவார்டு, செமினோல் மற்றும் வொலுசியா பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூறாவளி அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் ஒன்று என கூறப்படுகிறது. மேலும் இந்த சூறாவளி கரையை கடந்த போது பதிவான மழை மற்றும் காற்றின் வேகத்தை பிரதிபலிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்த சூறாவளி தரையைக் கடந்த போது மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி இருக்கிறது. சுமார் 18 லட்சம் மக்கள் மின்சார வசதி இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த புயலால் அங்கு இரண்டு பேரும் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் மின்சார வசதி பாதிப்பால் அவதியுற்று வருகின்றார்கள்.இந்த சூறாவளியின் போது கடலில் இருந்து சுறா ஒன்று போர்ட் மியர்ஸ் வெள்ள நீரில் சென்றுள்ளது. இந்த புயலால் ஃப்ளோரிடாவில் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. அதனால் மருத்துவ குழு மற்றும் 300 ஆம்புலன்ஸ்களை அமெரிக்க அரசு அனுப்பி இருக்கிறது. மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஃப்ளோரிடா மக்களுக்கு துணையாக தங்கள் அரசு இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |