கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கியூபாவிலிருந்து அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று ஐயான் சூறாவளியில் சிக்கியதில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 23 அகதிகள் நீரில் மூழ்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அமெரிக்க கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உடனடியாக புளோரிடாவின் ஸ்டார்ட் தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மூன்று பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அகதிகளுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து போய் இருக்கிறது மூச்சடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக அருகே உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 அகதிகள் நீந்தி கரை சேர்ந்திருக்கின்றனர். அவர்களும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் புயலால் மூழ்கிய படகில் மிதந்திருந்த 20 பேரை காணவில்லை அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கியூபாவை தாக்கிய ஐயான் சூறாவளியால் அந்த நாட்டில் பலத்த காற்று வீசி உள்ளது. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 1.1 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர் தீவின் மேற்கு பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ரியோ மேற்கு மாகாணத்தில் புயலுக்கு இரண்டு பேர் பலியாகி உள்ளன. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் கியூபாவில் நீண்ட கால உணவு பற்றாக்குறை மற்றும் மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தட்டுப்பாடு நிலவு வருவதால் ஜப்பான் சூறாவளி பாதிப்பும் சேர்ந்து கொண்டது இதனால் இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கான முயற்சிகள் சிக்கலாகி இருக்கிறது.