Categories
மாநில செய்திகள்

ஐயா…. “என்னோட பொண்டாட்டிய காணோம்”…. கடுப்பான நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பிரிந்து சென்ற மனைவியை கண்டுபிடித்து தருமாறு வழக்கு தொடர்ந்த கணவருக்கு நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் என்னுடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்துள்ளனர்.

அவரது மனைவி தன் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று காவல்துறையினர் முன்னிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டில் மனைவி பிள்ளைகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கருத்து வேறுபாடு உள்ளதை மறைத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த நீதிமன்றத்தை அவர் தவறாக பயன்படுத்தியதற்காக அவருக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் 4 வாரத்தில் மதுரை ஐகோர்ட் சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |