Categories
சென்னை மாநில செய்திகள்

ஐயா என் மகன் மீது துர்நாற்றம்..போலீஸிடம் முறையிட்ட தாய்.. காத்திருந்த அதிர்ச்சி…

மகன்  இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் 3 நாட்களாக  ஒரே வீட்டில் தாய் வசித்து வந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையிலுள்ள திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் வசித்து வரும் 35 வயதாகிய சரஸ்வதி   சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் காணத்தினால் சரஸ்வதியின்  கணவர் ஜீவானந்தம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னராகவே தனது மனைவியை பிரிந்து சென்று பெங்களூருவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.  தற்போது சரஸ்வதி  தனது  மகனுடன் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. 

சரஸ்வதியின் மகன்  சாமுவேல், சென்னையிலுள்ள திருநின்றவூர் சி.டி.எச் சாலையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில்  மூன்றாம் வகுப்பு படித்து  வந்துள்ளார். இந்நிலையில்  சிறுவன் சாமுவேலுக்கு  சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுவன் சாமுவேல் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். சாமுவேலின் தாய் சரஸ்வதிக்கும்  கொரோனா ஊரடங்கின் காரணமாக  சரியான வேலை இல்லாத காரணத்தினால் தனது மகனை வீட்டிலேயே வைத்து வைத்தியம் செய்து வந்துள்ளார். 

வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்த மாணவி! அவமானத்தால் தற்கொலை செய்த சோகம்!

இந்நிலையில் சரஸ்வதி போலீசாருக்கு தன் மகனின் உடம்பின் மீது எறும்புகள் மொய்ப்பதாகவும், உடம்பின் மீது துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சோதனை செய்து பார்த்ததில் சரஸ்வதியின் மகன் சாமுவேல் உயிரிழந்த நிலையில் அழுகி சடலமாக கிடந்துள்ளார் என்று தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகன் இறந்தது கூட தெரியாமல் அந்தத் தாய் மூன்று நாட்கள் அதே வீட்டில் இருந்துள்ளார் என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. மேலும் சிறுவனின் உடலை தற்போது போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மகன் இறந்த செய்தி கூட தெரியாமல் தாய் வாழ்ந்து வந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |