கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024மற்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல எல்லா தேர்தல்களிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்.
வேறு யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தொடர்ந்து பேசிய அவர், அனைத்துத் துறைகளையும் தனியாராக மாற்றி வரும் மத்திய அரசு எதற்காக ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டும்? வசூலித்த நிதியை மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கும் வழங்கவில்லை. ஜிஎஸ்டி வரி என்பது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதுபோல கூட்டாட்சிக் எதிரானது என்று கடுமையாக சாடியுள்ளார்.