Categories
மாநில செய்திகள்

ஐயா ரஜினி மீண்டு வர வாழ்த்துகிறேன்… சீமான் ட்விட்…!!!

சிறந்த திரைக் கலைஞரான ஐயா ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதனால் ரஜினி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் ரஜினி திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் பல தரப்பினரும் ரஜினியை நலம் விசாரித்தும், வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிறந்த திரை கலைஞரான ஐயா ரஜினிகாந்த் அவர்களின் உடல் நலிவுற்ற செய்தி அறிந்ததும் மிகவும் மனம் வருந்தினேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி முழு உடல் நலம் பெற்று மீண்டும் வர உளமார வாழ்த்துவது அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |