Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐயா OPS பத்தி கொஞ்சம்….! கையெடுத்து கும்பிடுறேன் சாமி….! இடத்தை காலி செய்த EPS….!!!!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தப் பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.அரசியல் பேசவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசித்தேன். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை” என்று தெரிவித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ஸாரி, வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார்.

Categories

Tech |