Categories
சினிமா

ஐயையோ!….. “அவர்களை சகோதரிகளாக நினைத்து நடிப்பது ரொம்ப கஷ்டம்”….. நடிகர் ஜீவா ஸ்பீச்….!!!!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று ஹீரோக்கள், 3 ஹீரோயின்கள் நடிக்கும் படம் “காபி வித் காதல்”. இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா, ஷர்மா, அமரிதா ஐயர், ரைசாவில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மிக்ஸ் பிரைவேட் லிமிட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரெட் ஏஜென்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினர் பட குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ஜீவா பேசியது, சுந்தர்சி சார் படத்தில் நடிக்கும் போது முதல் நாளே நமக்கு டென்ஷனை குறைத்து விடுவார். எப்படி இருந்தாலும் 45 நாளுக்குள் படத்தை முடித்திட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டு தான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக் கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். இருப்பினும் அதை சரியாக செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |