Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயையோ! விளையாட்டு மைதானத்த காணலயே….. வடிவேலு பட பாணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் பலே கொள்ளை….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விளையாட்டு மைதானம் அமைக்கப்படாமலே போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் அப்துல் கலாம் வாலிபர்கள் விளையாட்டு குழு செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு குழுவின் சார்பில் கைப்பந்து, கபடி மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு தனி தனியாக மைதானம் அமைத்து தர வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு வாலிபர்கள் மனு எழுதி அனுப்பினர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் இளைஞர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மைதானம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டதாக கூறி ஊராட்சி மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் கிராம சபை கூட்டத்தின் போது விளையாட்டு மைதானம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிக்கப் பட்டது. இதனையடுத்து வாலிபர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விட்டதாக கூறிய போலி ஆவணங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி உள்ளனர். அதில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்ப ட்டதாக கூறிய இடம் தற்போது வரை காலியிடமாகவே இருக்கிறது. ஏற்கனவே வாலிபர்கள் அமைத்திருந்த தற்காலிக மைதானத்தை கணக்கில் காட்டி விளையாட்டு மைதானம் அமைத்ததாக போலி கூறி ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கையாடல் செய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |