அஜித் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள படம் வலிமை. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார் மற்றும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சீமா குரோஷி நடித்துள்ளார் கொரோனாவின் முதல் அலைக்கு முன்னதாக எடுக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை ரிலீஸ் செய்யப்பட வில்லை. எனவே இந்த படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் மோஷன் பிக்சர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் அஜித் மிகவும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறினர். இந்நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டார். தொடர்ந்து ஊரடங்கு தளர்விற்கு பின்னர் வருகிற மார்ச் மாதம் இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இந்தப் படத்தின் முதல் பாதி விசாரணை செய்வது போன்றும் இரண்டாவது பாதி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்தும் இருக்குமென கூறியவாறு ட்விட்டர் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. இந்த பதிவு போலியானது எனவும் அதனை தான் கூறவில்லை எனவும் உடனடியாக அதை பிளாக் செய்யுங்கள் என திலீப் எனக்கு வயிறு வலி இன்னும் கொஞ்சம் கொஞ்சமாய் சுப்பராயன் தன்னுடைய வலைதள பக்கங்களில் கூறியுள்ளார்.