Categories
தேசிய செய்திகள்

ஐயோ! அந்த பெண்ணுக்கு ஆபத்து…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர்…. வைரலாகும் வீடியோ…!!!

ரயில் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காவல்துறை அதிகாரி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வசாய் சாலை ரயில் நிலையத்திற்கு தஹானு-அந்தேரி உள்ளூர் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்தின் நடுவில் பெண் ஒருவர் நிற்பதை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் நாயக் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாகரயிலை  நிறுத்துமாறு மோட்டார் வாகனத்தில் சைகை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்தப்பெண்ணின் அருகில் வந்த பிறகுதான் ரயில் நின்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை காப்பாற்ற அங்கிருந்து இரண்டு போலீஸ்காரர்களும் உதவி செய்துள்ளனர். இதுகுறித்து நாயக் தெரிவிக்கையில், ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன். தனக்கு உதவி செய்த ஆர்.பி.எப் பணியாளர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரின் இந்த செயலுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/i/status/1436663472167686148

Categories

Tech |