Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஐயோ அப்பா என்ன விட்டுட்டு போயிட்டியே…. இறுதி சடங்குக்கு ஏற்பாடு…. கடைசியில் ஷாக் டுவிஸ்ட்…!!!!

தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் முருகன் (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முறுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமார் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் லோடுமேன் ஆக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் மது அருந்திவிட்டு குடும்பத்தாரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது என தகராறு செய்து வந்துள்ளார். இதேபோன்று முருகன் நேற்றும் மது குடித்துவிட்டு குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் விஜயகுமார் முருகனை கண்டித்துள்ளார். அப்போது விஜயகுமாரும் மது அருந்தி இருந்ததால் முருகனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் ஒரு கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய விஜயகுமார் அருகில் உள்ள வாய்க்காலில் சென்று முருகனின் சடலத்தை போட்டு விட்டார். இதனையடுத்து மறுநாள் காலை எதுவுமே நடக்காது போல் தனது தந்தையை விஜயகுமார் தேடியுள்ளார். இதைத்தொடர்ந்து வாய்க்காலில் தன்னுடைய தந்தை மயக்கி விழுந்து உயிரிழந்ததாக கூறி அவருடைய இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக தில்லை நகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தியதில் முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின் காவல்துறையினர் முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விஜயகுமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பாவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |