காதலி வந்ததால் புதுத்தம்பதிகள் முதலிரவு அறையிலிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் பஞ்சாணியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக அவர்களுடைய காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் கணேஷ்க்கு கொரோனா அறிகுறி ஏற்பட்ட்டுள்ளதால், தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு பிறகு கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
இதையடுத்து கணேஷ்க்கு அவருடைய பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து நிச்சயமும் செய்துள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத கணேஷ் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணேஷின் காதலிக்கு இந்த தகவல் நண்பர்கள் மூலமாக தெரிந்ததால் பெங்களூரில் இருந்து சித்தூருக்கு வந்துள்ளார்.
பின்னர் தன்னை 6 ஆண்டுகள் காதலித்து ஏமாற்றி விட்டு தற்போது வேறு ஒரு திருமணம் செய்ததாக கணேஷ் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன் காதலரிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றபோது, கணேஷின் வீட்டார் உள்ளே விடாமல் இளம்பெண்ணை தாக்கியுள்ளனர். அப்போது புதுமணத்தம்பதிகளுக்கு முதலிரவு நடக்க இருந்ததால் காதலியின் வருகை தெரிந்த அவர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என்று பயந்துள்ளனர்.
எனவே தம்பதிகள் இருவரும் முதலிரவு அறையில் இருந்து வெளியேறி வீட்டில் இருந்து தப்பித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.