ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் ஒரு சில நாட்களில் தாலிபான்கள் ஆட்சி அமைய உள்ளது. இதனால் தங்கள் உயிருக்கு பயந்த மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வெளி மாநிலங்களுக்கு செல்வதற்காக விமான நிலையங்களில் அலைமோதி வருகின்றனர். மேலும் பேருந்துகளில் ஏறி செல்வது போல விமானங்களில் தொங்கியபடி கூட்டம் கூட்டமாக செல்லும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் c-17 ரக விமானம் மூலம் காபூலில் இருந்து கத்தாருக்கு 640 ஆப்கானியர்கள் நெருக்கியடித்து உட்கார்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானியர்களின் நிலையை கண்டாலே மனம் பதறுகிறது.