குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மண்சரிந்து 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன் குடிநீர் தொட்டி பதிப்பதற்காக குழி தோண்டும் பணி தொழிலாளர்களால் நடைபெற்றுள்ளது. அப்போது பணியில் ஈடுபட்ட புளியடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகன் ஆகிய இருவரும் மீதும் திடீரென மண் சரிந்து விழுந்ததுள்ளது.
இதில் இவர்களை மண் அமுக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.