Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஐயோ இப்படியா நடக்கணும்” பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி அவரது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் மின் கம்பியை பழுது பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுப்பிரமணியன் தூக்கி எறியப்பட்டார்.

இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |