Categories
உலக செய்திகள்

“ஐயோ! இப்படி ஒரு சிக்கலா”… கொரோனா பாதித்த ஆண்களுக்கு… அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியீடு…!!

ஜெர்மன் பல்கலைகழக ஆய்வின் முடிவு கொரோனா பாதித்த ஆண்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

உலகில் கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்  மேற்கொண்ட ஆய்வின் முடிவு ஆண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு அதிரவைக்கும் தகவலாக அமைந்துள்ளது.

அதாவது கொரோனா தொற்று, உயிரணுக்களை அதிகம் தாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது ஆண்களில் 84 பேரின் உயிரணுக்கள் பாதிப்படைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயிரணுக்களின் தோற்றம் 400% மாறுபட்டுள்ளது. எனவே இவ்வாறு உயிரணுக்கள் பாதிக்கப்பட்ட ஆண்கள் திருமணம் ஆன பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் உருவாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது கொரோனா பாதித்த ஆண்களை பெரிதும் கவலையடைய செய்துள்ளது.

Categories

Tech |