பெண்களை ஏமாற்றி சீரழித்த காசி வழக்கின் விசாரணையின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் 27 வயதான காசி. இவர் சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்த குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் காசி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து காசி தன்னுடைய லேப்டாப்பில் அழித்துள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சைபர்கிரைம் குழு கைப்பற்றியுள்ளது.
அதிலிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளன. மேலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து காசியுடன் தொடர்பில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் மும்பை நெல்லை போன்ற பல மாவட்டங்களைச் சேர்ந்த பல பெண்களை இவர் ஏமாற்றி சீரழித்துள்ளார். காசி பெரும்பாலும் அந்த பெண்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்பெண்களை வற்புறுத்தி அவர்கள் அனுப்பிய உடல் அழகு வீடியோவை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களை தனது காரில் வைத்தே பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் தொடர்பில் இருந்த பெண்களிடம் சென்று புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு அப்பெண்கள் தங்களுக்கு திருமணமாகி விட்டதால், புகார் எதுவும் வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார்.