தீராத வயிற்று வலியால் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் பாலு மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பாலு மகேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுமகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.