பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று சத்யாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யாவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதனால் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக இருந்த முனியப்பன் என்பவர் சத்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். இதனையடுத்து சத்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் சத்யாவும், அவரது குழந்தையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் குழந்தை எடை குறைவாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.