உடல் நிலை சரியில்லாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.