தீராத வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சகுந்தலாவிற்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனையடுத்து 2 நாட்களுக்கு முன்பு மறுபடியும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத சகுந்தலா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சகுந்தலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.