Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ எனக்கு வலி தாங்க முடியல” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷுக்கு  அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது.  இதனையடுத்து   நேற்று  மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சந்தோஷை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |