Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கண் வலி தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  ஜெயலட்சுமிக்கு கண் பார்வை சரியாக தெரியாததால்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று திடீரென கண் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |