மதுரையில் மகனை துன்புறுத்தி வந்த இரண்டாவது தந்தையுடன் தாயையும் சேர்த்து காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், முருகன் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்று நான்கு வயதில் மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்ததால் பெண்குழந்தையை கணவரின் பெற்றோர்கள் வளர்க்க கூட்டி சென்றதால் மகன் தனது தாயுடன் வளர்ந்து வருகிறான். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அதன்பின் கஜேந்திரன், சுகன்யாவின் 4 வயது மகனை சித்திரவதை செய்து வந்ததில் சுகன்யாவிற்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர குழந்தைகள் நல ஊழியர் பாண்டியராஜன் சமயநல்லூர் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். அப்புகாரை ஏற்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் சுகன்யாவின் மகனை கருமாத்தூர் சிறுவர்கள் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.