Categories
தேசிய செய்திகள்

ஐயோ என் குழந்தை…! குடையோடு விளையாடிய சிறுவன்…. பின் நேர்ந்த பயங்கரம்….. கதறும் தாய்….!!!!

மும்பை மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதினோராவது தளத்தில் குடையோடு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனுடைய குடும்பத்தினர் பைகுல்லா பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் உள்ள 11வது தளத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து குடையுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக 11வது தளத்திலிருந்து சிறுவன் கீழே விழுந்துள்ளர். இதனையடுத்து சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது சிறுவனோடு அவனுடைய தாயார் மற்ற உறவினர்களும் அதை அறையில் தான் இருந்துள்ளனர். சிறுவன் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |