Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஐயோ…! எவ்வித டிரெஸ் போடணும்னு…. சொல்ல மறந்துட்டாரு போல…. ஜோதிமணி காட்டம்…!!!

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவானது இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது நிற ஆடை அணிந்து வர வேண்டும் என அந்த வங்கியின் பொது மேலாளர் ராகவேந்திரா சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பி உள்ளார். இதில் குறிப்பிட்டபடி  அந்தந்த நாட்களில் உடையை அணிந்து வராத நபர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும்  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை குறித்து கரூர் ஜோதிமணி அவர்கள் கூறியதாவது, “நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற ஆடைகளை அணிந்து வர வேண்டும் என யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் அவர் எந்தவித ஆடை  அணிந்து வரவேண்டும் என்பதை கூற மறந்து விட்டார் போல!  மோடி  அரசானது இதுபோன்ற அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் தொடர்ந்து ஊக்குவித்து கொண்டு வருகிறது. இது  மிகவும் கடுமையாக கண்டிக்க கூடியது ஆகும். எனவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

Categories

Tech |