Categories
உலக செய்திகள்

ஐயோ! கடவுளே….. “55 பேட்டரிகள்” மூதாட்டியின் வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான பகீர் தகவல்….!!!

அயர்லாந்து நாட்டில் 65 வயதுடைய ஒரு மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மன அழுத்தம் காரணமாக 55 பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதனால் மூதாட்டிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் ஏராளமான பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் வயிற்றில் மொத்தம் 55 பேட்டரிகள் இருந்த நிலையில், இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியே வரட்டும் என்று மருத்துவர்கள் ஒரு வார காலம் காத்திருந்தார்கள்.

இந்த ஒரு வாரத்தில் இயற்கையாக 5 பேட்டரிகள் வெளியே வந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அந்த அறுவை சிகிச்சையின் போது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 46 பேட்டரிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அதன்பின் மீதமிருந்த 4 பேட்டரிகள் பெருங்குடலில் சிக்கி இருந்ததால் மலக்குடல் ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டது. மேலும் மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக 55 பேட்டரிகளை குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

Categories

Tech |