Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ திருடன்….! சத்தம் போட்ட மாணவி…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் கவிதா என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த கவிதாவை மர்மநபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் ககவிதாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.

இதனை அடுத்து கவிதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த மர்ம நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த பிரகாஷ்  என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |