ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். சில காரணங்களுக்காக சினிமா துறையை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் கொடுத்தன. தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற புகழ் நயன்தாராவை தான் சேரும். அதோடு கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் சோலோ கதாநாயகியாக நடித்து கேரியரை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார் நயன்தாரா.
சினிமா துறை மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ள நயன்தாரா விளம்பர படங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா போஸ் கொடுத்திருந்த விளம்பர படம் ஒன்று ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டு வருகிறது. அந்த போட்டோவில் நயன்தாரா மிகவும் ஒல்லியாக ஆள் அடையாளமே தெரியாதவாறு மாறியிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.