Categories
உலக செய்திகள்

“ஐயோ!”.. நாத்தம் தாங்க முடியல.. இந்த பகுதி மக்கள் தவிப்பு.. என்ன காரணம்..?

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் கடுமையாக துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.  

சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற நகரில் இருக்கும் Burgweiher என்ற பகுதியில் அதிகமாக துர்நாற்றம் வீசுவதால் நாங்கள் கடும் அவதிப்படுகிறோம் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கொரோனாவால் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த நாற்றத்துடன் தினம் தினம் வேலை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

அதாவது அந்த பகுதியில் வயல்கள் மற்றும் புல்வெளிகள் அதிகமாக காணப்படுகிறது. இவற்றிற்கு போடப்படும் உரத்தினால் துர்நாற்றம் அதிகமாக வீசுவதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் திட உரங்களை சில பருவ காலங்களிலும், திரவ உரங்களை சில பருவ காலங்களிலும் பயன்படுத்துவார்கள்.

தற்போது பயன்படுத்தப்படுவது திரவ உரம் என்பதால் அதிலிருந்து கடும் துர்நாற்றம் அதிக நேரமாக வீசுகிறது. மேலும் இத்தனை வருடங்களாக அப்பகுதி மக்கள் பணிக்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுவதால் நாற்றம் பெரிதாக தெரியவில்லை. தற்போது ஸோரோனோ காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால் இந்த வருடம் அதிக துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் நிலத்தின் உரிமையாளரான விவசாயி, இந்த நிலத்தில் உரமிட்டால் தான் அது எனக்கு நல்ல பலனை அளிக்கும் என்று கூறுகிறார். மேலும் ஒரு முறை மழை பெய்தால் இந்த நாற்றம் பறந்து போய்விடும் என்கிறார். எனினும் வருடத்திற்கு ஒருமுறை தான் உரமிடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |