Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ.! நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும்..? திண்டுக்கல் ஐ.லியோனி உருக்கம்..!!!!!

அறிமுக இயக்குனர் லாரன்ஸ் ஜெயக்குமார் அற்றை திங்கள் அந்நிலவில் எனும் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக  திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரன்ஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். மற்றொரு மாணவர் பாபு ஆண்டனி இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை பலவிதமான யோசனைக்கு பின் இந்த படத்தை எடுத்திருக்கின்றனர் படம் என்றாலே காதல் காட்சிகள் இல்லாமல் இருக்க முடியாது.

ஆனால் இவர்கள் காதல் காட்சிகளை மிகவும் நாகரிகமான முறையில் கையாண்டிருக்கின்றனர். ரத்தம் சண்டை காட்சிகள் பழைய பாணியிலான காதல் காட்சிகள் என பார்த்து பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இந்த அற்றை திங்கள் அந்நிலவின் படம் புதிய அனுபவத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் ஒரு விருந்தாகவும் அமையும் என்பது எனது நம்பிக்கை. சினிமாவில் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல அதனை நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். அதாவது ஒரு படத்தில் நான் நடிக்கும் போது ஒரே ஒரு உணர்ச்சியை காட்டுவதற்காக நான் பட்ட கஷ்டம் என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். அப்போதுதான் புரிந்தது நடிப்பு என்பது சாதாரணமான விஷயம் அல்ல என அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |