Categories
அரசியல்

“ஐயோ பயமாயிருக்கு அஞ்சி நடுங்கும்…!!”செல்லூர் ராஜு…!!!

மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக அதிமுகவினர் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடைசி மூன்று நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இல்லையேல் மதுரை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கவுன்சிலர்கள் பிரதிபலித்து இருப்பார்கள். சட்டம் ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்கெட்டு இருக்காது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிமுக அரசு மற்றும் நிர்வாகிகள் கொண்டு வந்த திட்டம். ஆனால் இது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கிறேன் என கூறியுள்ளார். திமுக இரட்டை வேடம் போடுகிறது. கேரளாவில் பொது பந்த் அறிவிக்கப்பட்டு இருப்பதைப் போல தமிழகத்திலும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அதை செய்யாமல் திமுக மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற போது திமுகவினர் அதனை விமர்சித்தனர். ஆனால் தற்போது ஸ்டாலின் அதைத்தான் செய்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வளர்ந்துவரும் ஒரு தலைவர் அவருக்கு எதிராக திமுக சதி வேலை செய்கிறது. இது எந்த வகையில் நியாயமாகும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |