ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை வழிநடத்தும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் தங்களுடைய கதவுகளைத் திறக்க வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளர் மலாலா தெரிவித்துள்ளார். தாலிபான்கள் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் என்ற அச்சம் இருப்பதால் அவர்களை பாதுகாக்க மேற்கு நாடுகள் முன்வரவேண்டும் என்றும், இதில் அனைத்து நாடுகளுக்கும் பங்கு உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.