Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….! “அவைகளை விட்டு வர மனம் இல்லை”…. உக்ரைனில் தவிக்கும் இந்திய மருத்துவர்….!!!!

இந்திய மருத்துவர் ஒருவர் உக்ரைனில் இருந்து தன்னுடன் செல்ல பிராணியை விட்டு வர மனம் இல்லாமல் நாடு திரும்புவதை ஒத்தி வைத்திருக்கிறார்.

உக்ரைனில் போர் அதிகரித்து வருவதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிகுமார் பட்டீல் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எம்பிபிஎஸ் படிக்க சென்றார். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்தார். பின்பு அவர்  2019ஆம் ஆண்டு முதல் பூனை இனத்தை சேர்ந்த 6 மாதம் ஆன கருப்பு சிறுத்தை மற்றும்  20 மாதங்கள் ஆன ஜாக்குவார் இனத்தைச் சேர்ந்த சிறுத்தை விலங்குகளை வளர்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் யூடிபில் பிரபலமாக இருக்கும் இவரை ஜாக்குவார் குமார் என்று அழைப்பார்கள்.

இதனை தொடர்ந்து இவர் கீவீல் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னிடம் இருக்கும் சிறுத்தைகளை பராமரிப்பது தொடர்பாக பேசியுள்ளார். இதற்கிடையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் செல்லப் பிராணிகளையும் தங்களுடன் அழைத்து வரலாம் என்று இந்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இந்திய தூதுரகத்திடம் ஜாக்குவார் குமார் இரண்டு சிறுத்தைகளை உக்ரைனில் இருந்து தன்னுடன் அழைத்து வர வேண்டும் என்று தொடர்பு கொண்டார். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறாததால் தான் நாடு திரும்புவதை ஒத்தி வைத்திருக்கிறார்.

Categories

Tech |