Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….! எதுவும் இன்றி பிணைக்கைதிகளாக இருக்கும் மக்கள்…. அடுத்தடுத்து உக்ரைனில் நேரும் சோகம்…!!!

ரஷ்யா படைகள் மரியுபோலில் நடத்தி வரும் தாக்குதலால் அங்கு உள்ள மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாக உக்ரைன் துணை மேயர் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா 17 வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில் மரியுபோல்  நகரில் ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

இந்த தாக்குதல் குறித்து துணை மேயர் செர்ஜி  ஓர்லோவ் கூறுகையில். “ரஷ்யா படைகள் மரியுபோலில் நடத்தி வரும் தாக்குதலால் அங்கு உள்ள மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் உணவு, தண்ணீர், மின்சாரம், நீர் வினியோகம், வெப்பமாக்கள் இல்லாமல் தவிர்த்து பிணைக்கைதிகள் போல் அங்கேயே சிக்கியுள்ளனர். இந்த நிலையில் செயற்கைக்கோள்களின் படங்களை வைத்துப் பார்க்கும் போது அங்குள்ள குடியிருப்புகள், வணிக மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தரைமட்டமாகி உள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தலைநகர் செர்னிஹிவில் ரஷ்ய படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தி  வரும் நிலையில் அப்பகுதிகளில் சில இடங்களில் வெளிச்சம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்க பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளால் மரியுபோல் நகரமும் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |