ஊஞ்சலூர் அருகில் காலில் காயத்துடன் கிடந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் காசிபாளையம் தொடக்கப் பள்ளி அருகில் காலில் காயத்தோடு மயங்கிய நிலையில் ஒரு குரங்கு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் வனக்காப்பாளர் கீர்த்தனாவுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து உடனே விரைந்து வந்த வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த குரங்கை மீட்டு சாக்குப் பையில் வைத்து அருகிலுள்ள கொம்பனை புதூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது குரங்கை பரிசோதித்த கால்நடை டாக்டர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவகுமார் ஆகியோர் அதன் காலில் முயலுக்கு வைக்கப்படும் கண்ணி ஒயர் இறுகிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதை கழற்றி விட்டு குரங்குக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சரியானதும் ஆஸ்பத்திரியில் பழம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வனத்துறைக்கு வட காப்பாளரும், ஓய்வுபெற்ற வனக்காப்பாளர் சிவலிங்கமும், குரங்கை கொண்டு சென்றுள்ளனர்.