நள்ளிரவில் சிசிடிவி கேமராவில் பதிவான வெள்ளை நிற உருவத்தை கண்டு மக்கள் அனைவரும் பீதியடைந்து உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் பின்புறம் உள்ள பகுதியில் திருட்டு சம்பவங்களை குறைக்க சிசிடிவி கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பதிவாகிருந்த கேமரா பதிவுகளை பார்த்த போது கடந்த 4-ஆம் தேதி 11 மணி அளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்குமிங்குமாக உலவுவது போல் பதிவாகி இருந்தது.இதனைப் பார்த்து பயந்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலாவுவதாக தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் சில தினங்களுக்கு முன் விபத்தில் இறந்தவர்கள் ஆவியாக சுற்றுவதாகவும் வதந்தியை கிளப்பி உள்ளனர். இதனை அடுத்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது பேய் அல்ல என்றும் அது இமேஜ் அலியாசிங் எனப்படும் புகைப்பட சிதைவு அல்லது புகைப்பட தகவலை பதிவு செய்வதில் கேமரா சென்சார் எடுக்கும் காலஅளவு போன்றவற்றால் ஏற்படும் ஒரு வித ஒளியியற் கண்மாயம் என நிபுணர்கள் விளக்கியுள்ளனர். மேலும் கேமராவில் படிந்திருக்கும் தூசு காரணமாகவும் சில நேரத்தில் எதிர்திசையில் நடந்து செல்பவரின் பிரதிபலிப்பு இது போன்ற உருவத்தை தோற்றுவிக்கும் என்று அதில் கூறப்படுகிறது.