நடிகை ராஷ்மிகா மந்தானா 2016 ஆம் வருடம் கிரிக் பார்ட்டி என்னும் படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர். தெலுங்கில் சலோ என்னும் படத்தின் மூலமாக 2018 ஆம் வருடம் அடியெடுத்து வைத்துள்ளார். அதன் பின் அதே வருடம் வெளியான கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தின் மூலமாக அவர் இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார். இதனை அடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். கடந்த வருடம் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா திரைப்படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி கதாநாயகியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் instagram சமூக வலைதளத்தில் 3.36 கோடி பின் தொடர்பவர்களைக் கொண்ட முதல் தென்னிந்திய நடிகை எனும் சாதனையை படைத்துள்ளார். இந்த சூழலில் நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்று பிரபல மருத்துவர் குரவ ரெட்டியை சந்தித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை குரவ ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சாமி சாமி என முழங்காலில் முழு எடையுடன் ஆடுவதால் தான் மூட்டு வலி வந்திருக்கிறது என என்னிடம் வந்த ஸ்ரீவல்லியிடம் இதைத்தான் நகைச்சுவையாக கூறினேன். மேலும் புஷ்பா திரைப்படம் தொடங்கியதும் நான் ராஷ்மிகாவை வாழ்த்த விரும்பினேன் அந்த சந்தர்ப்பம் அவரின் முழங்கால் வலியால் வந்தது அல்லு அர்ஜுனுக்கு விரைவில் தோள்பட்டை வலி வரும் என நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார்.