Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவில் பரவும் குரங்கு காய்ச்சல்…. தடுப்பூசி தேவைப்படுமா….? உலக சுகாதார அமைப்பு பதில்…!!!!!!!

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குரங்கு காய்ச்சல் பரவி கொண்டிருக்கின்றது. உலக அளவில் இந்த தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தேவைப்படுமா எனும் கேள்வி எழுந்து வருகின்றது. ஆனால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே இந்த குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி தேவைப்படும் என நம்பவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த அமைப்பின் அதிகபட்ச ஆபத்தான நோய்க்கிருமி குழுவின் தலைவர் ரிச்சர்ட்பிபோடி அதனை தொடர்ந்து  பேசும்போது தடுப்பூசி மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் விநியோகம் ஒப்பீட்டு பார்க்கும் போது   குறைந்த அளவில் தான் இருக்கின்றது என தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் இந்த வைரஸ் பரவலை நல்ல சுகாதாரம் கட்டுப்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் ஜெர்மனி நாட்டு  அரசு இந்த நோய்க்கான தடுப்பூசி குறித்து  ஆராய்வதாக கூறியிருக்கின்றது.

Categories

Tech |