ஐரோப்பிய பிராந்தியம் கொரோனா நோய் தொற்றிலிருந்து விரைவில் விடுதலை பெறும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஹான்ஸ் கிளக் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஹான்ஸ் கிளக் கூறியதாவது, ஐரோப்பிய நாடுகள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த நாடுகள் இந்நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சூழலையும் பெற்றுள்ளன.
இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியை அதிக மக்கள் செலுத்தி இருப்பதன் மூலமும் மற்றும் இந்த நோயின் தாக்கத்தால் குணமடைந்ததன் மூலம் மக்களுக்கு கிடைத்துள்ள இயற்கையான நோய் எதிர்பாற்றலால் கொரோனாவில் இருந்து இந்நாட்டிலுள்ள ஏராளமானவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. மேலும் குளிரான தட்பவெப்ப நிலையில் கொரோனாவின் தன்மை அதிகமாக பரவும்.
ஆனால் இன்னும் சில வாரங்களில் குளிர் காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும் மற்றும் புதிய வகை ஓமைக்ரான் அதிக உடல் நல பாதிப்பை ஏற்படுத்தாது போன்ற காரணங்களினால் ஐரோப்பிய நாடுகளால் இந்த நோய்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும். சுகாதார அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகள் மட்டுமல்லாமல் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள நோய்த்தடுப்பு ஆற்றலும் இதனையடுத்து புதியவகை கொரோனா பரவ தொடங்கினாலும் அதனை ஐரோப்பா தோற்கடிக்கும் .
இவ்வாறு கொரோனாவிடம் இருந்து ஐரோப்பா விடுதலை பெறும் நிலையில் உள்ளது. இருந்தாலும் வெளிநாட்டிலிருந்து வருபவரால் கொரோனா மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளதால் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் .
ஆனால் ஐரோப்பிய பிராந்தியத்தில் கடந்த வாரம் மட்டும் 1.2 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் மற்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சமநிலையில் இருக்கிறது .இதுவே ஒரு ஆரோக்கியமான போக்காகும் என்கிறார் ஹான்ஸ் கிளக்.