ஐரோப்பாவில் தொடங்கிய கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது பிரிட்டனை தாக்கப் போவதாக அதிர்ச்சி தகவலை அரசு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது இந்த நிலை பிரிட்டனுக்கு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை அரசு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் பல நாடுகள் தடுப்பூசி வழங்குவதில் ஏற்படுத்திய சிக்கல்தான் என கூறப்படுகிறது. மேலும் இருநாட்டு அரசியல் போட்டிகளும், மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம் எனவும் ஆய்வில் தெரிய வந்துளதுள்ளது.
மேலும் ஐரோப்பாவில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும் அப்போதுதான் பாதிப்பிலிருந்து வெளிவர இயலும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் ஊரடங்கு குறித்து எந்தவித மாற்றமும் கொண்டு வரவேண்டாம் எனறு அவர்கள் கூறியுள்ளனர். பிரிட்டன் நாட்டில் கென்ட் பகுதியில் உருமாறிய கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. தற்போது அந்த நிலை ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.