கடந்த 2015-ஆம் ஆண்டு பெல்ஜியமில் ஒரு லிட்டர் பாலின் விலை 10 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது பால் பொருட்களின் விலை குறைந்ததால் பாலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் வாடிய விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் சாலைகள் மற்றும் வயல்களில் பாலைக் கொட்டி கவிழ்த்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக ஒரு மிகப்பெரிய போராட்டம் நடந்துள்ளது. அந்தப் போராட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பாலை பீய்ச்சி அடித்துள்ளனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பாலை பீய்ச்சி அடிப்பதற்காகவே 3 லட்சம் லிட்டர் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.