ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் இருக்கும் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடைக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காதல் ஜோடிகள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். நேற்று ராணிப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தனது மகளுடன் கடைக்கு சென்று உலர் பழ வகை ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது முந்திரி தூள்களுடன் புழுக்கள் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அவர் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் அதன்படி கடைக்கு விரைந்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.