Categories
சினிமா

“ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சு….!!” பீஸ்ட் படம் குறித்த தலைவரின் பேச்சு…!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13-ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் நெல்சனை திட்டி தீர்க்கும் வகையில் மிகவும் மொக்கையான கதையில் அமைந்ததாக கூறப்படுகிறது. ஒரு மாஸ் ஹீரோவை இப்படி படு கேவலமான கதையில் நடிக்க வைத்த நெல்சனின் அடுத்த படைப்பு தலைவர் 169. அதாவது தலைவர் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படம் இயக்க இருக்கிறார்.

இது ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலைவரே நீங்க இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என கமெண்ட் செய்யும் அளவிற்கு கொந்தளிப்பில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் ரஜினி பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தபோது அவருடைய உறவினர் ஒருவர் படம் எப்படி இருந்துச்சி.? என கேட்டாராம். அதற்கு ரஜினி ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சு என பதிலளித்திருக்கிறார் இது தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Categories

Tech |