Categories
சினிமா

ஐஸ்வரியா போட்ட ட்வீட்… “எல்லாமே பொய், நடிப்பு”… பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

ஐஸ்வர்யாவின் ட்விட்டர் பதிவிற்கு, அவரை விளாசி வருகின்றனர் இணையதளவாசிகள்.

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் இவர் பெரும்பாலும் தனது கெரியர் பற்றி தான் டுவிட்டரில் பதிவு விடுவார். ஆனால் நேற்று ஐஸ்வர்யா, “நான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக ட்வீட் செய்ய தொடங்கி” இருக்கின்றார். அவர் காபி குடிக்கும் புகைப்படத்துடன் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களோ நல்லது, மகிழ்ச்சி என கூறுகின்றனர்.

ஆனால் இணையதள வாசிகளோ, சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள வேண்டாம். இதை நாங்கள் நம்ப மாட்டோம். நீங்கள் இருவரும் பிரிவது என்று முடிவு செய்த பிறகு தேசிய விருது தனுஷிற்கு கிடைத்தபோது அவருடன் சேர்ந்த புகைப்படத்தை பகிர்ந்து பெருமையாக போஸ்ட் போட்டவர் நீங்கள் அந்த சந்தோஷம் எல்லாம் பொய் என்பது அப்ப உங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்தால் அதை இப்படி சமூகவலைதளத்தில் பதிவிட மாட்டீர்கள் என விளாசி வருகின்றனர்.

Categories

Tech |