ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் எனது விருப்பமில்லாமல்தான் நடந்தது என ரஜினி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மக்களால் “சூப்பர்ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினிகாந்தின்169-வது படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவின் கல்யாண குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது ரஜினியிடம் பேட்டி எடுத்த மீடியாவொன்று, உங்களுக்கு ஐஸ்வர்யா-தனுஷ் திருமணத்திற்கு சம்மதமா என கேட்டிருக்கின்றனர். அதற்கு ரஜினி கூறியதாவது, “ஐஸ்வர்யாவின் திருமணத்தை நான் நடத்தவில்லை. ஊடகங்கள்தான் நடத்தியது . சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்கள் திருமணம் நடந்தது” என கூறியிருக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் ஐஸ்வர்யாவிடம், தனுஷ்க்கு தன்னை விட வயது குறைவாக உள்ளது. இதனால் வருங்காலத்தில் பிரச்சனை ஏற்படலாம்” என கூறியிருக்கின்றனர். ஆனால் ஐஸ்வர்யா நான் தனுஷை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக இருந்திருக்கிறார். இதன் காரணமாகவே இவர்களுக்கு திருமணம் நடத்தப்பட்டதாக ரஜினி கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.