Categories
சினிமா

ஐஸ்வர்யாவின் காதல்…!! 2வது முறையும் இப்படி ஆயிடுச்சே.…!! “சென்டிமென்டாக லாக்கான ஐஸ்வர்யா”…!!

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்துக்கு பின்னர் காதல் பாடல் ஒன்றை இயக்க திட்டமிட்டார். அதன்படி பாடலுக்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்க காதலர் தினத்தன்று அந்த பாடலை வெளியிடலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்குள் ஐஸ்வர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா மீண்டும் பாடலுக்கான படப்பிடிப்பை தொடங்கினார்.

தொடர்ந்து இதனை மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியிட்டு விடலாம் என திட்டமிட்டிருந்த ஐஸ்வர்யாவிற்கு மறுபடியும் சோதனை காலம் வந்தது. திடீரென ஏற்பட்ட காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ஐஸ்வர்யா காதல் பாடலை வெளியிடுவதை ஒத்திவைத்தார், இவ்வாறாக காதல் பாடல் வெளியீட்டுக்கான தேதியை அறிவிக்கும் போதெல்லாம் ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஒரு உடல்நலக்குறைவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் சென்டிமென்டாக இந்த பாடலுக்கான தேதியை தெரிவிக்காமல் ரிலீஸ் செய்துவிடலாம் என ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

Categories

Tech |