ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் டிவிட்டர் பதிவுகளால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவின் “பயணி” பாடல் வெளியானது.
இதற்கு தனுஷ் ட்விட்டரில் வாழ்த்து கூறிய போது ஐஸ்வர்யாவை தோழி என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இவர்கள் இருவரும் சேர்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஐஸ்வர்யா பதிலளிக்கும்போது “நன்றி தனுஷ்” என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களுக்கு இது சரியான பதிலடி என கூறுகின்றனர். ரசிகர்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வீர்கள் என எண்ணினோம். ஆனால் இப்படி செய்து விட்டீர்களே என ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.