Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகையின் வீடியோ வைரல்”… அப்படி என்னப்பா சொன்னாங்க…???

ஐஸ்வர்யாவின் முசாபிர் ஆல்பம் பாடலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு.

பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதன் பின்னர் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் முசாபர் என்ற ஆல்பம் பாடலை இயக்குக்கிறார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீண்டு வந்து முசாபிர் பாடலை இயக்கி வந்தார். மீண்டும் இவருக்கு காய்ச்சல், தலை சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முசாபிர் வெளியாக இருந்த நிலையில் ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் டீஸர் மற்றும் வெளியானது. தற்போது இவர் முசாபிர் ரிலீஸுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் குஷ்பு ஐஸ்வர்யாவின் முசாபிர் பாடலுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். குஷ்பூ வெளியிட்ட வாழ்த்து வீடியோவில் கூறியுள்ளதாவது, “ஐஸ்வரியா ஒரு வெற்றிகரமான இயக்குனர், டான்ஸர். அவர்கள் எது பண்ணினாலும் தன்னோட முன்னேற்றத்திற்காக தான் பண்ணுவாங்க. முசாபிர் ஆல்பம்பாடல் கிலிப்ஸை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கு. இந்த ஆல்பம் பாடல் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்” என கூறியிருந்தார். அதற்கு ஐஸ்வர்யா தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |